ரஷ்யாவை விட்டு வெளியேறிய வாக்னர் கூலி படையினர்!

வாக்னர் கூலி படையினர் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வாக்னர் படையனிர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 2000 பேர் கொல்லப்பட்டதாகவும் வாக்னர் படையனிரின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜின் காணொலி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ரஷ்யாவிற்குள் நுழைந்த படையினர், அங்கு முகாமிட்டனர்.

ரஷ்யாவின் முக்கிய பகுதியை கைப்பற்றியதாகவும், அறிவித்திருந்தனர். இதனால் ரஷய்யாவில் பதற்ற நிலை நீடித்து. இந்நிலையில், வாக்னர் படையினர் ரஷ்யாவின் கான்வாய் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாக ரோஸ்டாவ் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘வாக்னர் பிஎம்சி கான்வாய் ரோஸ்டோவை விட்டு வெளியேறி அதன் கள முகாம்களுக்குச் சென்றது என அப்பிராந்தியத்தின் ஆளுநர் வாசிலி கோலுபேவ் டெலிகிராமில் இட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்னர் கூலி படையினர் நேற்று அதிகாலை ரஷ்யாவின் முக்கிய நகரை கைப்பற்றின. ரஷ்யா மீது போர் தொடுப்பதாகவும் ரஷ்யாவிற்கு புதிய தலைவர் தேவை எனவும் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோவின் தரகு மூலம் விளாடிமிர் புட்டினுடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்த பின்னர் வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் படையினரை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

Social Share

Leave a Reply