உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (ஜூன் 28) சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், வெளிநாட்டு பயணங்கள் உட்பட கொழும்புக்கு வெளியில் மேற்கொள்ளப்படும் ஏனைய அனைத்து விஜயங்களையும் இரத்து செய்து கொழும்பிலேயே இருக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.