யொஹானியின் பாடல் ஹிந்தி திரைப்படத்தில்

யொஹானி பாடி உலகபுகழ் பெற்ற “மெனிக்கே மஹே ஹித்த ஆதரய” பாடல் ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெறவுள்ளது. தாங்கோட் என்ற ஹிந்தி திரைப்படத்தில் இந்த பாடலின் இசை பாவிக்கப்படவுள்ளது. பாடல் வரிகள் ஹிந்தி மொழியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இந்த பாடல் ஒலிப்பதிவுக்காக விரைவில் யொஹானி இந்தியா செல்லவுள்ளார்.

இந்த பாடல் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. இந்த பாடலை ஒளிப்பதிவு செய்து காட்சிகளை படமாக்கும் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளன. இந்த பாடல் எவ்வாறு காட்சியாக்கப்படுகிறது என்பது தொடர்பில் எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக தாங்கோட் திரைப்படத்தின் இயக்குனர் இந்திரா குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே யொஹானி ஹரிஸ் ஜெயராஜின் இசையில் தமிழ் திரைப்படம் ஒன்றிலும் பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யொஹானியின் பாடல் ஹிந்தி திரைப்படத்தில்

Social Share

Leave a Reply