பாடசாலைகளில் சுகாதார செயற்பாடுகள்

பாடசாலைகள் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிலையில் சுகாதர நடைமுறைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. வவுனியா சுகாதர திணைக்களம் கல்வி சார் துறையினரோடு பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருவதாக வவுனியா மாவட்ட தொற்றியிலாளர் வைத்திய கலாநிதி லவன் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு வலயத்தில் 44 பாடசாலைகளும், வடக்கு வலயத்தில் 64 பாடசாலைகளும் 200 மாணவர்களுக்கு உட்பட்டவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன.
வவுனியா வடக்கு வலயத்தில் 93 பாடசாலைகள் உள்ள போதும் 76 பாடசாலைகளே இயங்குகின்றன. இவற்றுள் 64 பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன. இந்த வலயத்தில் வவுனியா புதுக்குளம் முதலாவது பாடசாலையாக திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கின்ற வேளையில் மாணவர்களுக்கு சுகாதர ரீதியிலும், மனதளவிலும் சிக்கல் நிலைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வைத்திய கலாநிதி லவன் தெரிவித்தார். அதற்கான தயார் படுத்தல்களையம், ஆசிரியர்களுக்கு அறிவூட்டம் திட்டங்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களை ஆசிரியர்கள் அழுத்தம் வழங்காமல் கையளவேண்டுமென தெரிவித்த அவர் கொரோனா அறிகுறிகள் மாணவர்களிடம் தென்பட்டால் அவர்களை அன்பாக, அழுத்தம் அல்லது ஒதுக்கம் செய்யாமல் சரியான முறையில் கையாள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். தீண்டத்தகாதவர் போன்று அவர்களை கையாள கூடாது எனவும் தெரிவித்தார்.

கிட்ட தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்னர் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வரவுள்ளார்கள். வீட்டிலிருந்த காரணத்தால் பாடசாலை மனநிலைக்கு மீள திரும்ப அவர்களுக்கு சிறிது காலம் தேவை. பாடசாலைக்கு மீளவும் வருவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான உற்சாகத்தை வழங்கவேண்டும்.

இந்த பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது. பிள்ளைகளை அன்பாக கையாண்டு பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அவர்களாக விரும்பி செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

பாடசலைக்கு மீள பிள்ளைகள் செல்லும் போது உணவு தண்ணீர் இரண்டுமே கட்டாயம் வீட்டிலிருந்து கொடுத்து அனுப்ப வேண்டும். பாடசாலைகளில் உணவகங்களில் உணவு வாங்க அனுமதிக்கப்படாது. பாடசாலைகளில் பிள்ளைகள் உணவு உண்ணும் போது இடைவெளிகளை பேணுதல் மற்றும் தொற்று ஏற்படாமல் பிள்ளைகளை பாதுகாப்பது ஆசிரியர்களின் பொறுப்பென வைத்திய கலாநிதி லவன் கூறினார்.

பாடசாலைகளில் பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தண்ணீர் வசதி, கைகழுவம் ஏற்பாடுகள், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, சுகவீன அறை போன்றவை பாடசாலைகளில் இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளதா என்பது தொடர்பிலும் சுகாதார துறை கண்காணித்து வருகிறது.

ஆசிரியர்கள் பாடங்களை பூர்த்தி செய்வது தொடர்பில் இறுக்கமாக செயற்படாமல் மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். சமூக உளவியல் பிரச்சினைக்கு மாணவர்கள் உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே அது தொடரில் ஆசிரியர்கள் அதிக கவனமெடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட தொற்றியிலாளர் வைத்திய கலாநிதி லவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் சுகாதார செயற்பாடுகள்

Social Share

Leave a Reply