இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் அணியின் தலைவர் பந்துல வர்ணபுரவின் இறுதி கிரியைகள் நேற்று நடைபெற்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்நாள் தலைவர்கள் அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்க, சித்தார்த் வெத்திமுனி உட்பட இலங்கை அணியின் வீரர்கள் பலரையும் பலர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பந்துல வர்ணபுர நாலந்த கல்லூரியின் பழைய மாணவர். அத்தோடு தனது பாடசாலையில் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தார். பாடசாலை சமூகத்தினது அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.
பொரளை கனத்தை மயானத்தில் அன்னாரது இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.