பருக்களும், தீர்வும்…..!

பருக்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, 

01. உண்மையில் பருக்கள் வருவதால் நாம் கவலைப்பட வேண்டுமா?

உண்மையில் பருக்கள் ஒரு கிருமி தொற்று போன்றதுதான். அதனால் நாம் கவலை கொள்ள தேவையில்லை. ஆனால் எங்களை பார்ப்பவர்கள், எங்களுடன் பழகுபவர்களின் நெகடிவான கமெண்டுகள் தான் நாம் கவலையடைவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகவே பருக்கள் வந்தாலும், வராவிட்டாலும், நீங்கள் அழகானவர்தான். ஆரோக்கியமாகதான் இருக்கிறீர்கள் என்பதை முதலில் உணர்ந்துக்கொள்ளுங்கள்.

02. உடற் பயிற்சி செய்யுங்கள்

அதிகளவு நீரை பருக வேண்டும். அதேபோல் எங்கள் உடலில் தீய கொழுப்புக்கள் கரைய வேண்டும். இதற்கு சிறந்த வழி தினமும் அரை மணித்தியாளங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

03. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள். குறிப்பாக காபோவைதரேற்று கொண்ட உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் பச்சை காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதேநேரம் முறையான, சரியான டயட்டை ஃபோலோ செய்யலாம்.

04. வைத்தியரை நாடுங்கள்

உங்களுக்கு அதிகளவில் பருக்கள் இருக்கும்போது சரியான வைத்தியரை நாடுங்கள். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசித்து என்ன மாதிரியான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரிவு செய்யுங்கள். அவர்கள் சொல்வதன் படி சில காலங்களேனும் நடந்துக்கொள்ளுங்கள்.

05. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள்

இயற்கையாக கிடைக்கின்ற பொருட்களில் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஆனால் ஒரு சில பொருட்கள் உங்களுடைய தோலிற்கு ஒத்துவராததாகவும் இருக்கலாம். ஆகையால் எதை பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அதேபோல் அதை முகத்தில் பூசுவதற்கு முன் கைகளில் பூசி பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

Social Share

Leave a Reply