சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (04.08) மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையிலேயே தற்போது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

.

Social Share

Leave a Reply