சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் வைத்து ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இன்று காலை கிரியெல்ல வீதியில் விபத்து ஒன்று ஏற்பட்டதனை தொடர்ந்து, இளைஞர் ஒருவர் தாக்கப்படுவதனை வீடியோ படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சியின் அடிப்படையிலேயே குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குறித்த இளைஞனது தொலைபேசியினை இன்னுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் பறித்து வைத்துக் கொண்டு லைசன்ஸை தருமாறு மிரட்டியமையும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அத்தோடு தான் வழக்கறிஞர் ஒருவரின் மகன் என அந்த இளைஞன் கூறுவதும், அவரது தாயார் அடிக்க வேண்டாம் என அலறுவதும் குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொலிஸார் மீது மரியாதை குறைவு ஏற்படுகிறது என பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.