நடிகர் விஷால் மற்றும் நடிகை லக்ஷ்மி மேனன் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக பரவிய வதந்திகளுக்கு விஷால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து சமூகவலைத்தளப் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொதுவாக என்னை பற்றி ஏதாவது வதந்திகள் வந்தால் நான் அதை நினைத்து கவலைப்பட மாட்டேன்.
ஆனால் இது நடிகை என்பதையும் தாண்டி ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பதை மறந்து விட்டு பெயரை கெடுக்கும் படியான எந்த ஒரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
எனக்கான நேரம் காலம் கூடி வரும் போது என்னுடைய திருமணம் நடக்கும் என்று சொல்லி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஷால் மற்றும் லக்ஷ்மி மேனன் ஆகிய இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர்.