வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
கட்சி பேதங்களின்றி, தமிழ் கட்சிகள் பல இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களில் இயங்கும் தமிழ் கட்சிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் நம்பபடுக்கிறது.
உரம் இல்லாத நிலையில் விவசாயிகள் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளனர். இதனை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் முகமாகவும், அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கவும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிந்துள்ளது.
நவம்பர் மாத முற்பகுதியில் இந்த போராட்டம் நடைபெறும் வாய்ப்புகளுள்ளது.