வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாம்பழம்!

வவுனியா, தௌசிக்குளம் பகுதியில் மாம்பழம் ஒன்று 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தௌசிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது Tom EJC வகை மாம்பழம் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி இந்த மாம்பழத்தை வாங்கியுள்ளனர், முன்னதாக ஆகஸ்ட் 2022 இல், 3 மாம்பழங்கள் இவ்வாறாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பான பணம் ஆலயத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply