பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் தரம் 10 முதல் உயர்தம் வரையான வகுப்புகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தரம் 06 முதல் தரம் 09 வரை வரையான வகுப்புகள் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த வருட முதல் காலாண்டு பகுதியினுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகள், உயர்தர மற்றும் சாதரண தர பரீட்சசைகளை நடாத்த முடியுமென அமைச்சர் மேலும் நம்பிக்கை வெளிட்டுள்ளார்.
உயர்தரம் மற்றும் சாதாரண தர வகுப்புகளுக்கான தனியார் கல்வி நிலைய வகுப்புகளை நவமபர் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியுமென சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும் 50% மாணவர்களோடு இந்த வகுப்புகள் ஆரம்பிக்க முடியுமென சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது.