இங்கிலாந்து அதிரடி வெற்றி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி இலகுவான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து அணி ஆறு புள்ளிகளோடு முதலிடத்தை பெற்று அரை இறுதி வாய்ப்பை இலகு படுத்தியுள்ளது.

உலகக்கிண்ண 20-20 தொடரில் இன்று (30/10) இரண்டாம் போட்டியாக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆரூண் பிஞ் 44(49) ஓட்டங்களையும், அஸ்டன் ஏகர் 20(20) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களையும், டைய்மல் மில்ஸ் 2 விக்கெட்களையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களையும், அடில் ரஷீட், லியாம் லிவிங்ஸ்டொன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 71(32) ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 22(20) ஓட்டங்களையும், ஜொனி பார்ஸ்டோவ் 16(11) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அஸ்டன் ஏகர், அடம் ஷம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாக கிறிஸ் ஜோர்டன் தெரிவு செய்யப்பட்டார்

நாளை (31/10/2021) பிற்பகல் 3:30இற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இரவு 7:30இற்கு இந்தியா மற்றும் நியூ சீலாந்து அணிகளுகிட்டயிலான போட்டி நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து அதிரடி வெற்றி

Social Share

Leave a Reply