யாழ்ப்பாணத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டமைப்பு சீர் செய்து, சிறந்த வலையமைப்பை உருவாக்கும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளரும், ஐக்கிய மகளிர் சக்தியின் உபதலைவருமான உமாச்சந்திரா பிரகாஷ் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.
தேர்தலுக்கு அண்மையாக இல்லாமல், இடைக்காலத்தில் சரியான ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட இணைப்பாளர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கட்சியில் இணைப்பாளர்களாக, உறுப்பினர்களாக இணைய விரும்புவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் உண்மையாக சரியாக கட்சியோடு இணைந்து வேலை செய்யக்கூடியவர்கள் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இணைப்பாளர்களூடாக சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்திப்புகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாணத்துக்கான பொறுப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கரமரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் திருமதி உமாச்சந்திரா பிரகாஷ், முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமாரசுவாமி லக்சயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இதே போன்ற சந்திப்பு இடம்பெற்றது.