பாராளுமன்றம் இனி தொடர்ச்சியாக கூடும்

இன்றைய தினம் கூடிய விசேட பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் சகல நாட்களிலும் கூடவுள்ளது.

எனினும் அரச விடுமுறைகள் தவிர்ந்த சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய நாட்களிலும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை எதிர்வரும் 12ஆம் திகதியன்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை முன்வைக்கவுள்ளார்.

அதற்கமைய குறித்த வரவு – செலவு திட்டத்தினை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியில் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாராளுமன்றம் இனி தொடர்ச்சியாக கூடும்

Social Share

Leave a Reply