நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின்போது பக்தர்கள் தவறவிட்ட பெறுமதியான பொருட்கள், யாழ், மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் உரிமையாளர்கள், அவற்றை ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி தவறவிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.