ஜனாதிபதி – அலி சப்ரி பேச்சுவார்த்தை

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தாக்கம் தொடர்பில் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஏமாற்றம் தெரிவித்த நீதியமைச்சர் அலி சப்ரி தனது இராஜினாமா கடிதத்தை முன்னராக ஜனாதிபதியிடம் கையளித்திருந்த வேளையில், ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார்.

அத்துடன் ஒரே நாடு ஒரே சட்டத்தின் முன்மொழிவுகளை ஆய்வு செய்யும் ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் முன்மொழிவுகள் அனைத்தும் நீதியமைச்சிடம் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நீதியமைச்சர் ஜனாதிபதிக்கு முன்னராக அறிவித்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவியின் நியமனம் மற்றும் தனக்கு அதிருப்தியை அளித்திருக்கும் நிலையில், தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்தமைக்கு அதுவே காரணம் என்றும் அதேவேளை குறித்த செயலணியினால் முன்மொழிவுகளை மாத்திரமே முன்வைக்க முடியும் என்ற நிலையில், சட்டமூலங்களை திருத்து நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக அறியமுடிகிறது.

அதற்கமைய குறித்த கொள்கையின் மூலக்கருத்திற்கு அமைவாக வர்த்தமானியில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செயற்பாடானாது, தொடர்ச்சியாக வெளிடப்பட்டுவரும் வர்த்தமானிகளில் திருத்தங்கள் மேற்கொள்வதும் அல்லது அதனை நிராகரிப்பதும் அண்மை காலமாக இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி – அலி சப்ரி பேச்சுவார்த்தை

Social Share

Leave a Reply