கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
தொம்பேமட பிரதேசத்தில அமைந்துள்ள வீடொன்றின் மீது மண் மேடு தீடீரென சரிந்ததில் அங்கிருந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் சிக்கி அவ்வீட்டிலிருந்த தாயும், 8 மற்றும் 14 வயதுகளையுடைய இரு மகள்களுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.