கோழி இறைச்சியின் விலை மாறுமா?

கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் இன்று (21.09) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அந்த விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டுமென வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலையை 200 ரூபாவினால் குறைப்பதற்கு கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விலை குறைப்பிற்கு இணங்காவிடில், இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply