இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவிசாஸ்திரி விடைபெற்றுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி பதவியேற்றார். அதனை தொடர்ந்து அவரது பதவி காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியுடனான அவரது நான்கு ஆண்டுகால பயற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபீயாவுக்கு எதிரான போட்டியே அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி விளையாடிய கடைசி போட்டியாகும்.
எனினும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெற்றாலும் ரவிசாஸ்திரி, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை தொடர்ந்தும் வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
