உலகக்கிண்ண இலங்கை அணி அறிவிப்பு

உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி இன்று(26.09) இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இலங்கை அணி இந்தியாவுக்கு புறப்படவுள்ள நிலையில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வனிந்து ஹஸரங்கவின் உபாதை குணமுடையாத நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவரின் இடத்துக்காக டுஸான் ஹேமந்த சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

தஸூன் சாணக்க(தலைவர்), குஷல் மென்டிஸ்(உப தலைவர்), டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷன, கஸூன் ரஜித, மதீஷ பத்திரன, லஹிரு குமார, டுஸான் ஹேமேந்த, டில்ஷான் மதுசங்க.

சாமிக்க கருணாரட்ன மேலதிக வீரராக அணியோடு பயணிக்கவுள்ளனர்.

இலங்கை அணி 29 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடன் முதற் போட்டியில் விளையாடவுள்ளது.

Social Share

Leave a Reply