கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கடத்தல் வீடியோ-உண்மை வெளியானது!

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கடத்தப்பட்டது போன்ற ஒர் காணொளி நேற்று (25.09) வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் பல கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நலமாக உள்ளாரா என கேள்வி எழுப்பி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாரளுமன்ற உறுப்பினருமான கெளதம் கம்பீரும் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இந்த காணொளி உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னோட்ட காணொளி (Trailer) என தற்போது தெரியவந்துள்ளது.

கபில்தேவினது கைகளையும், வாயையும் கட்டி இருவர் இழுத்து செல்வது போன்று இந்த குறுகிய காணொளியின் முழு வடிவம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply