எனது கொள்கைகளுக்கு இணங்காதவர்கள் என் எதிரிகளே – மைத்ரி

எனது கொள்கைகளுக்கு இணங்காதவர்கள் என் எதிரிகளே!

எனது கொள்கைகள் இல்லாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு கங்காராமய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எனது கொள்கைகள் இல்லாத காரணத்தினால் நான் அவர்களுக்குப் நான் இப்போது பொது எதிரியாகியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் நீதிமன்ற வழக்குகளை தாக்கல் செய்யவில்லை, ஆனால் தயாசிறி ஜயசேகர எமக்கு எதிராக நீதிமன்றம் சென்றவர். அவர் தனது வழக்கை வாபஸ் பெற்று எம்முடன் பேச முடியும். குற்றப்பத்திரிகையில் உள்ள உண்மைகளை அவர் தீர்த்து வைத்து மீண்டும் எம்முடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்க முடியும். அதற்கு எந்த தடைகளும் இல்லை” என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply