நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண்!

ஸ்பா உரிமையாளர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய குறித்த இளம்பெண் ஸ்பா உரிமையாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

Social Share

Leave a Reply