மன்னார், மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையின் ,கலை பண்பாட்டு பெருவிழா நேற்று (06.10),வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் ஆரம்பித்து நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டிருந்த இப்பெருவிழாவில் கலைஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் நிகழ்வு, மற்றும் கலை நிகழ்வுகள் என்பன சிறப்பாக இடம் பெற்றன.
சிறப்பு விருந்தினர்கள் மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ,மாலை அணிவிக்கப்பட்டு,பாரம்பரிய இசை மற்றும் பாடல், ஆடலுடன்,மாவட்ட செயலகத்தினுள் அழைத்து வரப்பட்டனர்.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.பரந்தாமன் தலைமையில் இடம் பெற்ற இந்த மாவட்ட கலைப் பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லா.நிருபராஸ் கலந்து கொண்டதோடு பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வேறு திணைக்களத் தலைவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ்விழாவானது முற்றிலும் பாரம்பரிய முறையில் நடாத்தப்பட்டதோடு கலந்து கொண்டவர்கள் அனைவரும் கலாச்சார ஆடை அணிந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்