இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (12.10) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75மி.மீ. அதிகமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply