கேன் வில்லியம்சனின் வருகையும் நியூசிலாந்து அணியின் தொடரும் வெற்றிகளும்

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினோராவது போட்டியில் நியூசிலாந்து அணி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதல் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டியின் முதற் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று தொடர்ச்சியான வெற்றிகளை நியூசிலாந்து பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வேளையில் ஆரம்பம் முதல் அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் பங்களாதேஷ் அணியின் விக்கெட்களை கைப்பற்றினார்கள். நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறிய பங்களாதேஷ் அணிக்கு முஸ்பிகீர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் 96 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று அணியை ஓரளவு தூக்கி நிறுத்தினார்கள். அவர்களது இணைப்பாட்டம் முறியடிக்கப்பட மீண்டும் விக்கெட்கள் வீழந்தன.

ரஹீம் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். ஷகிப் அல் ஹசன் அரைச்சதத்தை பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தார். பின் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் மூலம் பங்களாதேஷ் அணி ஓரளவு சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றது. மஹமதுல்லா இறுதி வரை தனித்து நின்று போராடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக் கொடுத்தார். லொக்கி பெர்குசன், ரென்ட் பௌல்ட் ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்த இலக்கை நியூசிலாந்து அணி நிதானமாக துடுப்பாடி பெற்றுக் கொண்டது. ஆரம்ப விக்கெட்டாக கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திர வேகமாக ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன், டெவொன் கொன்வே ஜோடி 80 ஓட்டங்களை பகிர்ந்தனர். அதன் பின்னர் வில்லியம்சனுடன் இணைந்த டரில் மிச்செல் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். அதன் பின்னர் நியூசிலாந்து அணியின் வெற்றி இலகுவானது. கேன் வில்லியம்சன் துடுப்பாட்டத்தை இடை நிறுத்தி மைதானத்தை விட்டு உபாதை காரணமாக வெளியேறினார். டரில் மிச்சல் தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் யாரும் சொல்லக்கூடிய அளவில் சிறப்பாக பந்துவீசவில்லை.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
டெவோன் கொன்வேL.B.Wஷகிப் அல் ஹசன்455930
ரச்சின் ரவீந்திரபிடி – முஷ்பிகுர் ரஹீம்முஸ்ரபைசூர் ரஹ்மான்091320
கேன் வில்லியம்சன்Retired Hurt 7810781
டெரில் மிட்செல்  896764
ரொம் லதாம்  161111
கிளென் பிலிப்ஸ்     
மார்க் சப்மன்      
மிட்செல் சென்ட்னர்      
மட் ஹென்றி      
       
       
உதிரிகள்  13   
ஓவர்  42.5விக்கெட்  02மொத்தம்248   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்விக்
முஸ்ரபைசூர் ரஹ்மான்08003601
ஷொரிஃபுல் இஸ்லாம்7.5014300
ரஸ்கின் அஹமட்08005600
ஷகிப் அல் ஹசன்10005401
மெஹிதி ஹசன் மிராஸ்09005800
     
     

வீரர்

ஆட்டமிழப்பு

பந்துவீச்சாளர்

ஓ

ப

4

6

லிட்டொன்  டாஸ்

பிடி- மட் ஹென்றி

டிரென்ட் போல்ட்

00

01

0

0

ரன்ஷித் ஹசன் தமீம்

பிடி– டெவோன்
கொன்வே

லூக்கி பெர்குசன்

16

17

4

0

மெஹிதி ஹசன் மிராஸ்

பிடி– மட்
ஹென்றி

லூக்கி பெர்குசன்

30

46

4

0

நஜ்முல் ஹொசைன் சாண்டோ

பிடி– டெவோன்
கொன்வே

கிளென் பிலிப்ஸ்

07

08

1

0

ஷகிப் அல் ஹசன்

பிடி–
ரொம்
லெதாம்

லூக்கி பெர்குசன்

40

51

3

2

முஷ்பிகுர் ரஹீம்

Bowled

மட் ஹென்றி

66

75

6