இலங்கை அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா? போட்டி ஆரம்பம்.

இலங்கை அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா? போட்டி ஆரம்பம்.

இலங்கை இன்று நான்காவது போட்டியில் நெதர்லாந்து அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி லக்னோவில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இந்த இரு அணிகளும் உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டிகளில் இரண்டு தடவைகள் சந்தித்திருந்தன. இவற்றுள் இறுதிப் போட்டியும் அடங்குகிறது. இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. அப்போது விளையாடிய நெதர்லாந்து அணியில் விளையாடியிருக்காத முக்கிய வீர்ரர்கள் தற்போது விளையாடுகிறார்கள். ஆனால் இலங்கை அணியில் அப்போது விளையாடிய சில வீரர்கள்இல்லை . இது இலங்கை அணிக்கு பின்னடைவு.

இரண்டு அணிகளும் நான்காவது போட்டியில் மோதுகின்றன. நெதர்லாந்து அணி தென்னாபிரிக்க அணியை வென்று பலமாக களமிறங்கியுள்ளது. இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இன்று இலங்கை அணி வெற்றி பெறுமென இலங்கை ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.

இலங்கை அணி இரு மாற்றங்களை செய்துள்ளது. டுனித் வெல்லாளகே நீக்கப்பட்டு டுஷான் ஹேமந்த சேர்க்கபப்ட்டுள்ளனர். லஹிரு குமார நீக்கப்பட்டு கஸூன் ரஜித அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.

அணி விபரம்
நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, சாமிக்க கருணாரட்ன, டுஷான் ஹேமந்த, கஸூன் ரஜித

அணி  போவெதோச/ கைபுஓ.வே
நியூசிலாந்து04040000081.923
இந்தியா04040000081.659
தென்னாபிரிக்கா03020100041.385
அவுஸ்திரேலியா0402020004-0.193
பாகிஸ்தான்0402020004-0.456
இங்கிலாந்து0301020002-0.084
பங்களாதேஷ்0401030002-0.784
நெதர்லாந்து0301020002-0.993
ஆப்கானிஸ்தான்0401030002-1.250
இலங்கை0300030000-1.532

Social Share