பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வழங்கிய ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வழங்கிய ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (23.10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

283 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை வழங்கியது. ரஹ்மனுள்ள குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான் ஆகியோர் 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.அவர்கள் வழங்கிய ஆரம்பத்தை மத்திய வரிசை வீரர்கள் சரியாக தொடர்ந்தனர். குர்பாஸ் ஆட்டமிழந்ததும் ஷர்டான், ரஹ்மத் ஷா ஆகியோர் 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். ஷர்டான் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் விக்கெட்களை பாதுகாத்து, போட்டியின் போக்கிற்கு ஏற்ப நிதானமாக ரஹ்மத் ஷா, அணியின் தலைவர் ஹஷ்மதுல்லா ஷஹிதி ஆகியோர் துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை நகர்த்தி சென்றனர்.96 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றியினை நிதானமாக முடித்து வைப்பது எவ்வாறென காட்டியுள்ளனர்.


49 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

நிதானமான திட்டமிட்ட வெற்றியியாக இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்தது. ஆப்கானிஸ்தான் முதற் தடவையாக பாகிஸ்தான் அணியை ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் வென்றுள்ளது. அத்தோடு உலகக்கிண்ண தொடரில் இரண்டு வெற்றிகளை பெறுவதும் இதுவே முதற்தடவையாகும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

பாகிஸ்தான் அணிக்காக இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக் ஆகியோர் இருவரும் 56 ஓட்டங்களை முதல் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இமாம் உல் ஹக் இந்த தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பௌன்சர் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார். இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தவுடன் அப்துல்லா ஷபிக், பபர் அசாம் ஆகியோர் 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார். மொஹமட் ரிஷ்வான் ஒரு 6 ஓட்டங்களை பெற்றுவிட்டு ஆட்டமிழந்தார். பபர் அசாம் நிதானமாக துடுப்பாடி அவரது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். நூர் அஹமட் பாகிஸ்தான் அணியின் முக்கியமான விக்கெட்களை தகர்த்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த உதவினார். ஷதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் அதிரடி நிகழ்த்தி இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி அதிகம் ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக பந்துவீசியது அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 03 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலை அவர்களுக்கு அரை இறுதி வாய்ப்புக்கு கடினமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 3 தோல்விகள் என்ற நிலையில் காணப்படுகிறது. இது அவர்களுக்கு சாதக தன்மை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் ஒவ்வொரு மாற்றங்கலுடன் விளையாடியன. பாகிஸ்தான் அணி மொஹமட் நவாஸிற்கு பதிலாக ஷதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆப்கானிஸ்தான் அணி பஷால்ஹக் பரூக்கியிற்கு பதிலாக நூர் அஹமட் விளையாடினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் 4 சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடுகிறார்கள். இந்த மாற்றம் அவர்களுக்கு இன்று சிறப்பாக கைகொடுத்துள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
ரஹ்மனுல்லா குர்பாஸ்பிடி – உசாமா மிர்ஷஹீன் அப்ரிடி655391
இப்ராஹிம் ஷர்டான்பிடி – முகமட் ரிஸ்வான்ஹசன் அலி87103100
ரஹ்மத் ஷா  778452
ஹஷ்மதுல்லா ஷஹிதி  484540
அஸ்மதுல்லா ஓமர்சாய்      
இக்ரம்  அலிகில்       
மொஹமட் நபி      
ரஷீட் கான்      
முஜீப் உர் ரஹ்மான்      
நவீன் உல் ஹக்      
நூர் அஹமட்      
உதிரிகள்  09   
ஓவர்  49விக்கெட்  02மொத்தம்286   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
ஷஹீன் அப்ரிடி10005801
ஹசன் அலி10014401
ஹரிஸ் ரவூப்08014700
உசாமா மிர்08005500
ஷதாப் கான்08004900
இப்திகார் அகமட்05002700
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
அப்துல்லா  ஷபீக்L.B.Wநூர் அஹமட்587552
இமாம் உல் ஹக்பிடி – நவீன் உல் ஹக்அஸ்மதுல்லா ஓமர்சாய்172220
பபர் அசாம்பிடி – மொஹமட் நபிநூர் அஹமட்749241
மொஹமட்  ரிஸ்வான்பிடி – முஜீப் உர் ரஹ்மான்நூர் அஹமட்081001
சவுத் ஷகீல்பிடி – ரஷீட் கான்மொஹமட் நபி253430
ஷதாப் கான்  4038  1 1
இப்திகார் அகமட்பிடி – அஸ்மதுல்லா ஓமர்சாய்நவீன் உல் ஹக்402724
ஷஹீன் அப்ரிடி   0303  00 
      
      
      
உதிரிகள்  17   
ஓவர்  50விக்கெட்  07மொத்தம்282   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
நவீன் உல் ஹக்07005202
முஜீப் உர் ரஹ்மான்08005500
மொஹமட் நபி10003101
அஸ்மதுல்லா ஓமர்சாய்05005001
ரஷீட் கான்10004100
நூர் அஹமட்10004303

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உசாமா மிர்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹமட்

புள்ளிப்பட்டியல்

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா05050000101.353
நியூசிலாந்து05040100081.481
தென்னாபிரிக்கா04030100062.212
அவுஸ்திரேலியா0402020004-0.193
பாகிஸ்தான்0502030004-0.400
ஆப்கானிஸ்தான்0502030004-0.969
பங்களாதேஷ்0401030002-0.784
நெதர்லாந்து0401030002-0.790
இலங்கை0401030002-1.048
இங்கிலாந்து0401020002-1.248

Social Share