தடுமாறி மீண்ட அவுஸ்திரேலியா

தடுமாறி மீண்ட அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயில் உலககிண்ணத்தொடரின் 36 ஆவது போட்டி இன்று (04.11) அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அவுஸ்திரேலியா அணியின் முதலிரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்டன. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் ஓட்ட எண்ணிக்கையினையும் உயர்திக் கொடுத்தனர். ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்ததுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. மார்னஸ் லபுஷேன் சிறப்பாக துடுப்பாடி அவரது 10 ஆவது அரைச்சதத்தைத்தையும் இந்த உலககிண்ணத்தில் 2 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேந்த கமரூன் கிரீன், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியின் முதலிரு விக்கெட்களையும் தகர்த்த்துக்கொடுத்தார். ஆதில் ரஷீத் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியின் முக்கியமான விக்கெட்களை தகர்த்துக்கொடுத்தார். இறுதி நேரத்தில் மார்கஸ் ஸ்ரொய்னிஸ் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொடுத்தார். அவர் அட்டமிழந்ததுடன் அடம் ஷம்பா அதிரடியாக துடுப்பாடி ஓரளவு ஓட்ட எண்ணிக்கையை உயர்திக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

இந்த இலக்கை இங்கிலாந்து துரத்தியடிப்பதற்கு போராட வேண்டிய நிலைமை ஏற்படும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ட்ரவிஸ் ஹெட்பிடி – ஜோ ரூட்கிறிஸ் வோக்ஸ்111010
டேவிட் வோர்னர்பிடி – டேவிட் வில்லிகிறிஸ் வோக்ஸ்151611
ஸ்டீவன் ஸ்மித்பிடி – மொயீன் அலிஆதில் ரஷீட்445230
மார்னஸ் லபுஷேன்L.B.Wமார்க் வூட்718370
ஜோஷ் இங்லிஷ்பிடி – மொயீன் அலிஆதில் ரஷீட்030600
கமரூன் கிரீன்Bowledடேவிட் வில்லி475250
மார்கஸ் ஸ்ரொய்னிஸ்பிடி – ஜொனி பாஸ்டோலியாம் லிவிங்க்டன்353223
பட் கம்மின்ஸ்பிடி – டாவிட் மலான்மார்க் வூட்101310
மிட்செல் ஸ்டார்க்   1013 0 0
அடம் ஷம்பா பிடி – ஜோஸ் பட்லர் கிறிஸ் வோக்ஸ் 2919 0 
ஜோஸ் ஹெஸல்வூட்   0101  0
உதிரிகள்  10   
ஓவர்  49.3விக்கெட்  10மொத்தம்286   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டேவிட் வில்லி10014801
கிறிஸ் வோக்ஸ்9.3005404
மார்க் வூட்10007002
லியாம் லிவிங்க்டன்06004201
மொயீன் அலி04002800
ஆதில் ரஷீட்10003802

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்ரொய்னிஸ் , கமரூன் கிரீன் , ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், , லியாம் லிவிங்க்டன், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்

Social Share

Leave a Reply