”கற்பனை கதைகளை சொல்வது சுலபம்” – நாமல்!

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வளவு கற்பனை கதைகளையும் யாரும் சொல்ல இயலும் ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால் அதை செயற்படுத்துவதே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அடிமட்டத்தில் செயற்படுத்தப்படாத அனைத்தும் வீணானது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply