‘சமூக பொலிஸ் நிலையங்கள் உருவாகும்’ – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சமூக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில்இ வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக பொலிஸ் துறையினர் என்ற பெயரில் செயற்படவுள்ள இந்தத் திட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும்,

இந்தத் செயற்பாடு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் மேற்பார்வையின் கீழ்இ வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில் செயல்படுத்தப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

'சமூக பொலிஸ் நிலையங்கள் உருவாகும்' - வடமாகாண ஆளுநர்

Social Share

Leave a Reply