ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம் – ஜனாதிபதி அறிவிப்பு செய்திக்கு விளையாட்டு அமைச்சர் மறுப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் தடை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவாரகம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அமச்சரவை உப குழு தலைவர் அலி சப்ரியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என வெளியிடப்பட்ட செய்திக்கு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் இடைக்கால நிர்வாகசபையினை நியமிப்பதாக இருந்தால் அமைச்சரவை அனுமதி பெறப்படவேண்டுமென முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply