ஓய்வூதிய கொடுப்பனவு தேவையில்லை’ – சாணக்கியன்

மக்களுக்காக சேவையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றில் இன்று (15/11) இடம்பெற்று வரும் வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேபோன்று, அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு ஓய்வூதிய கொடுப்பனவு நீக்கப்பட வேண்டுமென சாணக்கியன் வலியுறுத்தினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 31 வயதாகும் எனக்கு ஓய்வூதிய கொடுப்பனவு எனக்கு தேவையில்லை. எது எவ்வாறாயினும் ஓய்வூதிய கொடுப்பனவை இல்லாமலாக்கினால் ஒருசில எம்.பிக்கள் அதிகாரத்தில் இருக்கும்போது பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாh்கள் என்றும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டிருப்பதாக தனக்கு அறியக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட நுழைவு பரீட்சைக்கான வினாத்தாள’ முன்கூட்டியே வெளியானதாகவும்,அதுதொடர்பான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (14/11) இடம்பெற்ற குறித்த பரீட்சையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களே இவ்வாறு முன்கூட்டி வெளியாகியுள்ளதாகவும், ஆகையால்குறித்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் மற்றும் நிதியமைச்சர் இணைந்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஓய்வூதிய கொடுப்பனவு தேவையில்லை' – சாணக்கியன்

Social Share

Leave a Reply