மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்
நேற்றையதினம் 06/12 காலை 11.30 மணியளவில் மன்னார் பதில் மாவட்டச் செயலாளர் பரந்தாமன் அவர்களின் முன்னிலையில் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தற்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவியேற்றுள்ள மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் கடந்த 12 வருடங்கள் மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.
நானாட்டான் பிரசே செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே இவர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவியேற்றுள்ளார்.