ஹபராதுவ, ரக்வான மற்றும் கொலொன்ன பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
காலி – மாத்தறை பிரதான வீதியின் தலவெல்ல சந்தியில் முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரக்வான பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய சாரதி உயிரிழந்துள்ளார்.
கொலொன்ன மொறய பகுதியில் 85 வயதுடைய பெண் ஒருவர் பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.