இந்தியாவை வென்றது பாகிஸ்தான். ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

பாகிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட மற்றும் இந்தியா 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று (10.12) ICC அக்கடமி, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றது. அடர்ஷ் சிங் 62(81) ஓட்டங்களையும், உதய் சகரன் 60(98) ஓட்டங்களையும், சச்சின் தாஸ் 58(42) ஓட்டங்களையும்பெற்றனர் . பந்துவீச்சில் மொஹமட் சீஷான் 4 விக்கெட்களையும், அமிர் ஹசன், உபைத் ஷா 2 விக்ட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்றது. இதில் அசன் அவைஸ் ஆட்டமிழக்காமல் 105(130) ஓட்டங்களையும், சாட் பைக் ஆட்டமிழக்காமல் 68(51) ஓட்டங்களையும் ஷஹ்ஷைப் கான் 63(88) ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த போட்டியின் நாயகனாக அசன் அவைஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட மற்றும் நேபாளம் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று ICC அக்கடமி 2, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 6 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 73 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜம்ஷிட் சட்ரன் 106(152) ஓட்டங்களையும், நுமன் ஷா 60(41) ஓட்டங்களையும், ரஹீமுல்லா சுர்மதி 35(65) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபாஷ் பண்டரி, குல்சன் ஜா, ஹேமந்த் டாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆகாஷ் சந்த், டிபேஷ் கண்டல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதியிலுக்கு துடுப்பாடிய நேபாளம் அணி 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்றது. இதில் அர்ஜுன் குமல் 91(108) ஓட்டங்களை பெற்றார். பரிடூன் தவூட்ஸை நசீர் கான் மரூப்கில் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மொஹமட் யூனுஸ் 2 விக்கெட்களையும், வஹிடுல்லா சட்ரன், கலெல் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக ஜம்ஷிட் சட்ரன் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நாளை (11.12) ICC அக்கடமி, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 7 ஆவது போட்டியாக
நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஜப்பான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நாளை (11.12) அக்கடமி, டுபாய் 2 மைதானத்தில் ஆசிய கிண்ணத்தின் 8 ஆவது போட்டியாக நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply