விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்..!

வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை மற்றும் கண்டியிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.து. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் வரை செல்லும் பயணிகளின் வசதி கருதியும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply