அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தமது தவறினால் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக கடந்த 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது.
சிலமணிநேரங்களுக்கு பின்னர் மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.