முச்சக்கர வண்டியில் வெதுப்பக உற்பத்திகளை விற்கும் போர்வையில் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த சுன் பான் சாரதி ஒருவர் மடிவெல பிரகதிபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து, பல்வேறு அளவுகளில் 28 போத்தல்களில் இருந்த 37000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சூன் பான் சாரதியாக பணிபுரியும் பிரகதிபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக மிரிஹான தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஞ்சுள துஷார அவர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலமே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரகதிபுர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை பரிசோதிக்கும்போது வெதுப்பக உற்பத்திகளை பொதியிடும் பகுதியின் பின் பகுதியில் குறித்த மதுபானம் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.