அஸ்வெசும நலன்புரி குறித்து நிதி இராஜங்க அமைச்சரின் விசேட அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்;படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரச வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை எதிர்வரும் சிலநாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டம் 2 மில்லியன் குடும்பங்களின் நலன்புரிக்காக உருவாக்கப்பட்டதுடன் தற்போது 1.4 மில்லியன் குடும்பங்கள் இதன்மூலம் நன்மைகளை பெற்று வருகின்றனர்.

இந்த திட்டம் தொடர்பில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அஸ்வெசும கொடுப்பனவின் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பம் இம்மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply