ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து விஜேராம சந்தி வரை பேரணியாக செல்ல முற்பட்ட போது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து போராட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.