பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென வலியுறுத்தி அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில், ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிரமத்தை எதிர்கொள்ளும் வகையில் பலர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அடிப்படை உரிமைகளை மீறிய நபராக தேஷபந்து தென்னகோன் பெயரிடப்பட்டுள்ளமை, போராட்டக்களம் மீதான தாக்குதலில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக, அவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.