19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணம் ஆரம்பம்

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (19.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் முதலாவது போட்டி தென்னாபிரிக்கா, புலூம்பொன்டெய்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய அமெரிக்கா அணி 40.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் சரியாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் ரியுபன் வில்சன், ஒலிவர் ரிலி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜோன் மக்னலி 2 விக்கெட்களையும், கார்சன் மக்கலௌக், ஸ்கொட் மக்பெத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றது. இதில் ரயான் ஹன்டர் ஆட்டமிழக்காமல் 50(63) ஓட்டங்களை பெற்றார். பந்துவச்சீல் ஆர்யா கர்க் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்த போட்டியின் நாயகனாக ஒலிவர் ரிலி தெரிவு செய்யப்பட்டார்.

தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்ட மற்றும் மேற்கிந்திய தீவுகள் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நேற்று (19.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 2 ஆவது போட்டி தென்னாபிரிக்கா, பொட்செஸ்டுருமில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றது. இதில் டெவன் மரைஸ் 65(38) ஓட்டங்களையும், ஜுவான் ஜேம்ஸ் 47(54) ஓட்டங்களையும், டேவிட் டீகர் 44(98) ஓட்டங்களையும், லுவான் ட்ரே ப்ரெடோரியஸ் 40(34) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நேதன் சீலீ 3 விக்கெட்களையும்இ, நேதன் எட்வர்ட், டெஷவ்ன் ஜேம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜெவல் அன்ட்ருவ் 130(96) ஓட்டங்களையும், நேதன் சீலீ 33(55) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குவேனா மாபாகா 5 விக்கெட்களையும், ரிலீ நோர்டொன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக குவேனா மாபாகா தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply