இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம்; தெரிவித்துள்ளது.

வானிலை எதிர்வு கூறலுக்கமைய பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply