2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 26 ஆம் திகதிவரை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொடருக்கான ஏலம், டுபாயில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரரான அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.