எரிபொருள் விலைகளில் இன்று(04) மாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இறுதியாக ஜனவரி மாதம் 31ம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இதேவேளை, மின்சார விநியோகம், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்றைய(03) தினம் வெளியிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.