வெளிநாட்டவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து குறித்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயிலில் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு பெட்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் பயணச்சீட்டு இன்றி பயணித்தனர்.
இதன்போது ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து குறித்த ஊழியர்களின் சேவையை
இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு
ரயில்வே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நாவலப்பிட்டி ரயில்வே நிலைய பாதுகாப்பு அதிகாரியின் பணி இடைநிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்விசாரணைகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.