மாணவர்களுக்கும் கொரோனா தொற்று அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களுக்குள் கொரோனா தொற்று அதிரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்குள்ளும் கொரனோ தொற்று ஏற்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதர பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன இந்த தகவலை தெரிவித்துள்ளார். பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக ஊடகம் ஒன்றுக்கு உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார். ஆனாலும் இதுவரை பாரதூரமான தொற்றுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கவிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென், மேல், மத்திய மாகாணகங்களில் அதிக தொற்று ஏற்பட்டு வருவதாகவும், மாவட்ட ரீதியாகவும் தொற்றுகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பலருக்கும் தெரியாமலேயே அவர்களுக்குள் தொற்றுள்ளது. அவ்வாறானவர்களின் பிள்ளைகள் மூலமாக மற்றைய பிள்ளைகளுக்கு தொற்று ஏற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்கு நெருக்கமான நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நெருங்கி பழகும் போது தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆசிரியர்களும், பெற்றோரும் பிள்ளைகளுக்கு முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், தொற்று நீக்கிகளை பாவித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு அறிவுரை வழங்க வேண்டுமெனவும், ஊக்கிவிக்கவும் வேண்டுமென அவர் மேலும் அறிவுரை வழங்கியுள்ளார்.

மாணவர்களுக்கும் கொரோனா தொற்று அதிகரிப்பு

Social Share

Leave a Reply