வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், நாளை மறுதினம் (18) கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தினத்தன்று கைது செய்யப்பட்டவர்ளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்திற்கு நீதிகோரி போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.